தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து இன்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் தேர்வுகளை துவங்குவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தேர்வுகள் எப்படி நடத்துவது எத்தனை நாட்கள் நடத்துவது போன்றவை ஆலோசிக்கபட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி விரைவில் பொது தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
15
ReplyDelete