Saturday, 5 March 2022

திங்கள் மற்றும் செவ்வய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரத்தைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 7/3/2022 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 மேலும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் 73 2022 அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 7/3/22 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாசிக்கொடை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 8/3/2022 செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு.

No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...