தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை செய்தி வெளியீடு.
தமிழகத்தில் மே 5-ஆம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கும் மே 10ஆம் தேதி முதல் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 9.55 லட்சம் மாணவர்கள் 3 ஆயிரத்து 936 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
பதினோராம் வகுப்பு மாணவர்கள் 8.83 இலட்சம் மாணவர்கள் 3118 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
பன்னிரண்டாம் வகுப்பில் 8.37 லட்சம் மாணவர்கள் 3118 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
மொத்தம் தமிழகத்தில் 26.7 6 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்
No comments:
Post a Comment